சூர்யா - காஜர் அகர்வால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். இப்படம் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோடையில் ரிலீசாகியிருக்க வேண்டிய இப்படம் சினிமா தொழிலாளர்களின் பிரச்சினை காரணமாக தள்ளிப் போய் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜோத்பூர் பாலைவனப்பகுதியில் சுமார் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் சுவாரஸ்யமான, பிரம்மாண்டமான காட்சிகளும் இப்படத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் இப்படத்தை முடித்து, சீக்கிரமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் விவேக், ஈஷா ஷர்வாணி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»
எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன் read more»
ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர் read more»
விஸ்வரூபம் 2! read more»
சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான் read more»
விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு! read more»
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»