வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது. அதனால் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனத் தாங்கள் கோருவதாகவும் படைத் தளங்கள் அகற்றப்பட வேண்டும் எனக் கோரவில்லை என்றும் தமிழ்த் தேசியக கூட்டமைப்பு கூறியுள்ளது. வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டா என்றும், படைக்குறைப்பு செய்யப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டார். வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் முழுமையாக அகற்றப்படவேண்டுமென் எப்போதுமே கோரவில்லை. அப்படியான எந்தக் கோரிக்கையையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்வைத்ததில்லை. இராணுவத்தின் பிரசன்னம் அங்கு குறைக்கப்படவேண்டுமென்றே தாம் எப்போதும் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அசௌகரியத்தையும், அவமானத்தையும் கொடுக்கும் வகையில் இருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் சகல கருமங்களிலும் படையினரின் தலையீடு இருக்கிறது. மக்கள் செய்யக்கூடிய விவசாயம், கைத்தொழில், வியாபாரம் என்பவற்றைக் கூட இராணுவமே செய்யும் ஒரு நிலைமை வடக்கில் உள்ளது. மக்களின் தனிப்பட்ட வைபவங்களில் எந்தவித அழைப்பும் இல்லாமல் படையினர் கலந்துகொள்கின்றனர். அங்கு சிவில் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை அரச அதிபரோ, பிரதேச செயலாளரோ எடுப்பதில்லை. மாறாக படையினர்தான் அங்கு சிவில் நிர்வாகத்தின் தீர்மானங்களை எடுக்கின்றனர் என சம்பந்தன் குறி;பிட்டார். வடக்கு, கிழக்கில் இருப்பதுபோலான நிலைமை தெற்கில் இல்லை. ராஜபக்ஷ குடும்பத்தினர் முதலில் யதார்த்தத்தை உணரவேண்டும். எதைச் சொன்னாலும் அவர்கள் உண்மையைப் பேசுவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»