பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனமைடைந்துள்ள நிலையில் முன்னாள் இராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா அரசாங்கத்தை பதவி கவிழ்க்க முடியாதென அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார். சரத் ஃபொன்சேகா தற்போதைக்கு அரசியலில் ஈடுபட முடியாதென சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர கூறியுள்ளாரெனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரத் ஃபொன்சேகா கருணை மனு ஒன்றை சமர்ப்பித்தால் மட்டுந்தான் அவர் அரசியலில் ஈடுபட முடியுமெனவும் அமைச்சர் கூறினார். இது குறித்து இன்று முற்பகல் கொழும்பில் உள்ள வெளிநாட்டு செய்தி முகவர் நிறுவனம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா - சரத் ஃபொன்சேகா வீரவசனங்கள் பேசி மக்களை குழப்ப முடியாதென தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், சோமவன்சவுக்கு எதிரான விசனங்கள் ஜே.வி.பிக்குள் அதிகரித்து, அந்த கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதெனவும், இந்த நிலையில் சரத் ஃபொன்சேகா யாருடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை பதவி கவிழ்க்கப் போகின்றாரென அமைச்சர் கேள்வி எழுப்பினார். சரத் ஃபொன்சேகா அரசை விமர்சிக்காமல் அமைதியாக இருந்து செயற்பட்டால் அவரது அரசியல் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் வெற்றி பெறுமெனவும் நிமால் ஸ்ரீபால டி சில்வா கூறினார
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»
அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு நேர்மையான வழியில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இரா சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். read more»
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»