இணையத்தளங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் இலங்கையில் சட்டங்களில் திருத்தம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. அமைச்சரவை முடிவுகள் குறித்த தகவல்களை வழங்கும் செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டார். இலங்கையில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லையென குறிப்பிட்ட அவர், நியாயமற்ற வகையில் விமர்சனத்துக்கு உள்ளாகுவோர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு உரிமையை வழங்குவதுதான் தமது நோக்கமெனத் தெரிவித்தார். ஊடக சுதந்திரம் என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி, ஆட்கள் மீது சேறு ப+சும் நடவடிக்கையை பல இணையத்தளங்கள் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறை கூறினார். இதேவேளை, இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் நிராகரித்தார். ரோக்கியோவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் அதிக ஊடக சுதந்திரம் உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை நாளேடுகளில், அத்துமீறிய விமர்சனங்கள் இருக்குமெனவும், ஆயினும் அந்த ஏடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லையெனவும் கூறினார். இதேவேளை, இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் நிராகரித்தார். ரோக்கியோவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் அதிக ஊடக சுதந்திரம் உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை நாளேடுகளில், அத்துமீறிய விமர்சனங்கள் இருக்குமெனவும், ஆயினும் அந்த ஏடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லையெனவும் கூறினார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»