இசை உலகில் தனக்கென இசை சாம்ராஜ்யம் படைத்தவர்கள் பலர். அவர்களின் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று பலரும் இந்திய சினிமாவிற்கு விலாசமாய் இருந்துள்ளனர். அவர்கள் வழியில் தற்போதைய இளம் இசையமைப்பாளர்கள் பலரும் அவரவர்களின் தனித்திறமை மூலம் இசையை கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் தங்களது 25வது படத்தை எட்டியுள்ளனர். வெயிலில் தொடங்கி கடைசியாக வெளிவந்த சகுனி படம் வரை ஜி.வி.பிரகாஷின் இசைப்பயணம் தொடர்கிறது. அவரின் 25வது படமாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தாண்டவம் படம் வெளிவர இருக்கிறது. இதனால் இப்படத்திற்கு கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கிறார் ஜி.வி. அதேப்போல் சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, இதுவரை 43 பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். வேலாயுதத்தை படத்தை அடுத்து அவரே நடித்து இசையமைத்து வெளிவர உள்ள படம்தான் 'நான்'. இது அவருக்கு 25வது படமும் கூட, மேலும் தான் ஹீரோவாகவும் அவதரித்து இருப்பதால் இந்தபடத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி.
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»
எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன் read more»
ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர் read more»
விஸ்வரூபம் 2! read more»
சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான் read more»
விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு! read more»
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»