ரோறி ஸ்ராஃபோர்ட் கொலையில் குற்றாவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட மைக்கல் றாஃபெர்ட்டிக் தண்டனை வழங்குவதற்கான நீதிமன்ற அமர்வு இன்று இடம்பெறும். முதல் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு, கடத்தல், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான பாலியல் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென கடந்த வெள்ளிக்கிழமை ஜூரர்கள் முடிவு செய்தார்கள். முதல் நிலைக் கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியென காணப்பட்டவர்களுக்கு 25 வருடங்கள் நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்யப்பட முடியாத ஆயுட் சிறைத் தண்டனை விதிக்கப்படவேண்டுமென சட்டம் கூறுகிறது. அவர் புரிந்த ஏனைய குற்றங்களுக்கான தண்டனையும் விதிக்கப்படவேண்டும். தண்டனை குறித்து நீதிமன்றம் அறிவிப்பதற்கு முன்பு, ரோறியின் மரணம் காரணமாக தமக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்து உறவினர்களின் அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளதாக ரோறியின் தந்தை நேற்றுத் தெரிவித்தார். நீதிமன்றத்தில் கருத்து வெளியிடுவதற்கு மைக்கல் றாஃபெர்ட்டிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»