நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரடியாக அழைத்து பேசவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவுக்குழுவில் இடம்பெறுவதாக இருந்தால் கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதிக்குமென கூறப்பட்ட நிலையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை தகவல்கள் கூறுகின்றன. கடந்த திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி, தெரிவுக்குழு அமைக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குகொள்வதற்கு ஏற்றவாறு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவும் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் சம்பந்தனை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக சம்பந்தனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது ஜனாதிபதி சந்திக்க விரும்புவதாகவும் ஆனால், சந்திப்புக்கு திகதி குறிக்கப்படவில்லையெனவும் தெரிவித்தாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவது தொடர்பான தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வாரத்தில், இலங்கை அரசிடமும், ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எழுத்து மூலமாக வழங்குமென செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»