2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இனப் பேரழிவின் போது கொல்லப்பட்டவர்களையும் காணாமற்போனவர்களையும் நினைவுகூர்ந்து, நாளைய தினம் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சனையாலும் இனக் கலவரங்களாலும், போர்க் காரணங்களினாலும் தமிழ் உடன் பிறப்புக்களான இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளதாகவும், அதனால், அவர்களின் உறவுகளும், ஏனையோரும் ஆறாத் துயரில் மூழ்கியுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் மாலை ஐந்து மணியளவில், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையக வளாகத்தில் இடம்பெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தீபமேற்றல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிராத்திக்குமாறு உயிர் நீத்தவர்களின் உறவினர்களிடமும், அனுதாபிகளிடமும் அவர் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, வன்னிப் பகுதியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாளை மாலை 6:10 க்கு சுடரேற்றுமாறு மே 18 இயக்கம் என்ற அமைப்புக் கேட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளேடு குறிப்பிடுகிறது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»