தமிழகத்தில் இலங்கை வான் படையினருக்கு வழங்கப்படும் பயிற்சி நிறுத்தப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்படவேண்டுமென தமிழக கட்சிகள் கேட்டுள்ளன. தமிழகம் தாம்பரத்தில் உள்ள வான்படைத் தளத்தில் 9 மாத கால பயிற்சி பெறுவதற்காக இலங்கை வான்படையைச் சேர்ந்த ஒன்பது பேர் அண்மையில் சென்றார்கள். அது குறித்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சிகள் இந்திய மத்திய அரசின் மீது கடும் கண்டனம் வெளியிட்டன. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எதுவும் கூறாது மௌனமாக உள்ள இந்திய அரசு, இலங்கை வான்படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயலென தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் வெளியிட்டார். வான்படைத் தளத்தின் வெளியே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென வைகோ எச்சரித்தார். தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சியளிக்கும் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலென மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வெளியிட்டார். இலங்கை வான்படையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியளிக்கக் கூடாதெனவும், அந்தச் செய்தி உண்மையென்றால், அவர்களை இந்திய அரசு திருப்பி அனுப்பவேண்டுமெனவும் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»