சூழல் வெப்பமடைதல் தந்த இன்னுமொரு பரிசாக கடலலைகளின் இரைச்சல் அதிகரிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. இப்போதெல்லாம் சூழல்மாசடைதல் பற்றிய பேச்சுக்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது. காரணம் விஞ்ஞானிகள் மட்டத்தில் மட்டுமே பேசுபொருளாகவிருந்த உலக வெப்பமயமாதல் இப்போது ஒவ்வொரு மனிதருக்கும் நேரடியாகவே விளைவுகளை ஏற்படுத்தத்தொடங்கிவிட்டது. எனவே அதுபற்றி நடத்தப்படும் ஆய்வுகளை மக்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள். தற்போது வந்திருக்கும் அமெரிக்க ஆய்வு முடிவொன்று கடல் அலைகளின் ஒலியின் அளவு அதிகரித்து வருதாகத் தெரிவிக்கிறது. இதுவும் வெப்பநிலை அதிகரிப்புக்காரணமாகவே கடல்களில் இரைச்சல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு கடல்களில் ஒலியின் அளவு அதிகரித்திருப்பது திமிங்கலங்கள், டொல்பின்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தாக அமையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மழை, அலைகள், கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் ஒலியின் அளவு மிக மிக குறைவான வீச்சைக் கொண்டதாகும். அதேபோல சோனார் கருவிகளிலிருந்து வெளியாகும் ஒலி, கப்பல் போக்குவரத்து, கடலில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகவும் கடலில் ஒலி அலைகள் பரவுகின்றன. ஆனால் இந்த ஒலியை, நீரில் இயற்கையாக காணப்படும் இரசாயனப்பொருள் உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறதாம். இந்த இரசாயனப்பொருட்கள் தற்போது கடல்களில் குறைந்து வருகிறது என்பதுதான் இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்பு. அமிலமயமாக்கல் காரணமாக கடல் நீரில் இந்த இரசாயனப்பொருளின் அடர்த்தி குறைந்து வருகிது. காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் . அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்தே காபனீரொட்சைட் கடல் நீரில் அதிகரிக்க முக்கிய காரணம். கடந்த 40 ஆண்டுளில் கடலில் கப்பல் போக்குவரத்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாம். இப்படி கடல் நீர் மாசுபட்டு வருவதால், அதில் உள்ள இரசாயனப்பொருட்கள் குறைந்து கொண்டே வருகிறன. இதன் காரணமாக கடல்களில் தற்போது ஒலியின் அளவு அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் திமிங்கலங்கள், டொல்பின்கள் உள்ளிட்ட கடல் வாழ் விலங்குகளுக்கு பேராபத்து ஏற்படும் என்று முடிக்கிறது அந்த ஆய்வு.
கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு read more»
'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்' read more»
கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. read more»
சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு read more»
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்! read more»
அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்! read more»
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்! read more»
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு! read more»
"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு! read more»
உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்! read more»