செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இதற்கான ஆய்வில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற ஆய்வுகளை ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விஞ்ஞானிகளும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறி அங்கு வாழ முடியும். அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடைபெற வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் விண்வெளி உயிரியல் துறையின் தலைமை விஞ்ஞானி டேவிட் மெக்கேயின் தலைமையிலான குழுவினர் இதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் சக்தி வாய்ந்த புதிய மைக்ராஸ்கோப்புகள் மற்றும் உபகரணங்கள் மூலம் எரிநட்சத்திர கற்களை பரிசோதனை செய்தனர். மேலும் அங்குள்ள பாறைகளையும் சோதித்து பார்த்தனர். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் வாயுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எரிநட்சத்திர கற்களை சோதித்து பார்த்ததில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அங்கு ஐஸ்கட்டிகளால் ஆன குளிர்ந்த பாலைவனம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் விழுவதற்கு முன்பு 3 எரிநட்சத்திர கற்களும் 10 லட்சம் ஆண்டுகள் சூரியனை சுற்றியபடியே இருந்துள்ளது. இதற்கிடையே செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் நுண்ணுயிர்கள் இருந்தது. எனவேஇ அங்கு உயிர்கள் வாழ முடியும் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியும் என்று நாசாவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு read more»
'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்' read more»
கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. read more»
சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு read more»
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்! read more»
அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்! read more»
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்! read more»
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு! read more»
"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு! read more»
உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்! read more»