அமெரிக்காவின் என்டேவர் விண்ணோடம், இன்று அதிகாலை விண்ணுக்கு ஏவப்பட்டது. புளோரிடாவின் கெனடி விண்வெளி நிலையத்தில் இருந்து கிழக்குப் பிராந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.14 க்கு அந்த ஓடம் விண்ணுக்கு ஏவப்பட்டது. நேற்றைய தினம் அந்த விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்படவிருந்தபோதிலும், அடர்த்தியான முகிற்கூட்டம் காரணமாக அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. பதின்மூன்று நாட்கள் விண்வெளியில் இருக்கும் அந்த விண்ணோடம், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான பகுதி ஒன்றை எடுத்துச் செல்கிறது. ஆறு கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தப் பகுதி, புவியைப் பார்க்குமாறு பொருத்தப்படும். அதன் காரணமாக, அந்தப் பகுதி, விண்வெளிவீரர்கள் ஓய்வெடுக்கும் இடமாக மாறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணில் இருக்கும் விண்வெளி வீரர்கள், தங்களது ஒய்வு நேரத்தில் புவியைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு read more»
'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்' read more»
கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. read more»
சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு read more»
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்! read more»
அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்! read more»
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்! read more»
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு! read more»
"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு! read more»
உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்! read more»