ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். "ஜாகிங்" (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் முளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடு படுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர். பயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான முளைப் பதிவுகள் கணினி முலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன. எலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய முளை செல்கள் உருவாகின்றன. ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன. ஜாகிங் செய்வதுஇ சுவாசத்தை துரிதப்படுத்துவதன் முலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது.
கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு read more»
'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்' read more»
கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. read more»
சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு read more»
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்! read more»
அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்! read more»
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்! read more»
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு! read more»
"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு! read more»
உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்! read more»