முல்லைத்தீவுப் பகுதியில் பாரம்பரியமாக வசித்த மக்கள் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டு, முகாம்களில் வாடும் நிலையில், வெளிமாவட்ட மீனவர்கள் அங்கு செல்வதற்கான ஏது நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது. புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நாயாறு பகுதியிலும், முல்லைத்தீவின் கடற் பகுதியிலும் மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் அங்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவென ஸ்ரீலங்காவின் அமைச்சர மில்றோய் பெர்ணான்டோ அந்தப் பகுதிக்குக் கடந்த வாரம் பயணம் செய்தார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தப் பகுதிகளில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்ததாகவும், கடந்த 20 வருடங்களாக, மோதல்கள் காரணமாக அவர்கள் அங்கு செல்லவில்லையென்றும் அமைச்சர் கூறினார். முல்லைத்தீவுப் பகுதி மக்கள், பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதால், ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக அங்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ரஷ்யாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல். read more»
நடிகர் முரளியின் உடல், இன்று தகனம். read more»
குரான் நூலின் பிரதிகளை எரிப்பதற்கு Stephen Harper கண்டனம் read more»
தமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது அறியாத மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டகளில் ஈடுபடுகிறார்கள் - தயாஸ்ரீ ஜயசேகர read more»
கிழக்கில் யுத்தம் முடிந்த பின்னர் 95 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் - த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர செல்வராசா read more»
லஷ்கர் ஈ தொய்பா என்ற பயங்கரவாதக் குழுவின் பயிற்சி மையமாகக் கொழும்பு - இந்திய ஏடு குற்றச்சாட்டு read more»
பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க ஐ.நா அமைதிகாப்புப் படையினர் தவறியுள்ளார்கள் - ஐ.நா உயர் அதிகாரி read more»
இந்தியாவில் தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களுக்குத் வேலைவாய்ப்பில் 20 சதவீதத்தை ஒதுக்கும் அவசர சட்டம். read more»
கனடாவில் முதன்மை வட்டிவீதம் ஒரு சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்ப்பு. read more»
த.தே. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நா. உறுப்பினர் பியசேன அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளார் - இலங்கை அரச ஊடகங்கள் read more»