அவசரக்கால சட்டம் நீடிப்பதற்காக இன்று கூட்டப்பட்ட சிறப்பு நாடாளுமன்ற அமர்வின்போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சபையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினார். சபை அமர்வுகள் இடம்பெறும் வேளையில் அங்கு உரைநிகழ்த்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நாவலப்பிடியவில் வைத்து தனது கட்சி ஆதரவாளர்கள் பயணித்த பேருந்து தாக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறினார். மலையகத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலினை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்டதாகவும், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையம் அமைச்சரின் கட்சி அலுவலகமாகச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை தொடாந்து வாக்கெடுப்பு இடம்பெறும் வேளையில் பதாகை ஒன்றை ஏந்தியபடி மனோ கணோசன் சபாநாயகர் ஆசனம் முன்பாக நின்றார். வாக்கெடுப்பு நடைபெறும் வேளையில் இடையூறு விளைவிக்கூடாதெனச் சபாநாயகர் தெரிவித்தபோதும்; சுமார் 10 நிமிடம் வரை தனியே நின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்த மனோ கணேசன் பின்னர் ஆசனத்தில் அமர்ந்தார்.
ரஷ்யாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல். read more»
நடிகர் முரளியின் உடல், இன்று தகனம். read more»
குரான் நூலின் பிரதிகளை எரிப்பதற்கு Stephen Harper கண்டனம் read more»
தமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது அறியாத மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டகளில் ஈடுபடுகிறார்கள் - தயாஸ்ரீ ஜயசேகர read more»
கிழக்கில் யுத்தம் முடிந்த பின்னர் 95 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் - த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர செல்வராசா read more»
லஷ்கர் ஈ தொய்பா என்ற பயங்கரவாதக் குழுவின் பயிற்சி மையமாகக் கொழும்பு - இந்திய ஏடு குற்றச்சாட்டு read more»
பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க ஐ.நா அமைதிகாப்புப் படையினர் தவறியுள்ளார்கள் - ஐ.நா உயர் அதிகாரி read more»
இந்தியாவில் தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களுக்குத் வேலைவாய்ப்பில் 20 சதவீதத்தை ஒதுக்கும் அவசர சட்டம். read more»
கனடாவில் முதன்மை வட்டிவீதம் ஒரு சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்ப்பு. read more»
த.தே. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நா. உறுப்பினர் பியசேன அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளார் - இலங்கை அரச ஊடகங்கள் read more»