தனது நீண்டகால பெண் நண்பி ஒருவருக்கு ரீரீசீயின் சார்பில், ஐம்பதாயிரம் டொலர் பெறுமதியான நிழற்படப்பிடிப்புப் பணிகள் கிடைக்க உதவிய ரீரீசீ திட்ட முகாமையாளர் ஜோன் கேர்சியோ (John Cursio) பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது உதவியால் நிழற்படம் தொடர்பான பணிகளை ரீரீயீடம் பெற்ற றொபின் தியோன் (Robin Thoen) என்ற பெண்னின் சேவைகளையும் நிறுத்தியுள்ளதாக ரீரீசீ நிர்வாகம் அறிவித்தது. அந்த விடயத்தில் conflict of interest நிலவியதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரீரீசீயின் பேச்சாளர் ஒருவர் அறிவித்தார். அந்தப் பெண்னின் சேவைகளைப் பெறுமாறு கேர்சியோ பரிந்துரை செய்தமை தவறென்று தெரிவிக்கப்பட்டது. கேர்சியோ மேற்கொண்ட பணிகள் குறித்து, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். அப்படியான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதற்கான வழி வகைகள் குறித்து ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக ரொறன்றோ ஸ்ரார் ஏடு கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விடயம் பகிரங்கமாகியது.
ரஷ்யாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல். read more»
நடிகர் முரளியின் உடல், இன்று தகனம். read more»
குரான் நூலின் பிரதிகளை எரிப்பதற்கு Stephen Harper கண்டனம் read more»
தமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது அறியாத மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டகளில் ஈடுபடுகிறார்கள் - தயாஸ்ரீ ஜயசேகர read more»
கிழக்கில் யுத்தம் முடிந்த பின்னர் 95 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் - த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர செல்வராசா read more»
லஷ்கர் ஈ தொய்பா என்ற பயங்கரவாதக் குழுவின் பயிற்சி மையமாகக் கொழும்பு - இந்திய ஏடு குற்றச்சாட்டு read more»
பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க ஐ.நா அமைதிகாப்புப் படையினர் தவறியுள்ளார்கள் - ஐ.நா உயர் அதிகாரி read more»
இந்தியாவில் தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களுக்குத் வேலைவாய்ப்பில் 20 சதவீதத்தை ஒதுக்கும் அவசர சட்டம். read more»
கனடாவில் முதன்மை வட்டிவீதம் ஒரு சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்ப்பு. read more»
த.தே. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நா. உறுப்பினர் பியசேன அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளார் - இலங்கை அரச ஊடகங்கள் read more»