இஸ்ரேலுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முயற்சி மேற்கொள்வதற்காக, அமெரிக்க உப ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக பறாக் ஒபாமா பதவியேற்ற பின்னர், இஸ்ரேலுக்குச் சென்றுள்ள அதி உயர் அதிகாரி அவராவார். பலஸ்தீனர்களுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு, இஸ்ரேலியப் பிரதம மந்திரி பென்யமின் நெதன்யாஹவின் மீது அவர் அழுத்தம் பிரயோகிப்பார். இன்றைய தினம் இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்திக்கும் பைடன், நாளை, மேற்குக் கரைக்குப் பயணம் செய்து, பலஸ்தீனத் தலைவர்களைச் சந்திப்பார். மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் குடியிருப்புக்களைக் கட்டுவதை நிறுத்த மறுத்த இஸ்ரேலின் பிரதம மந்திரி நெதன்யாஹ{வைச் சந்திக்க இதுவரை மறுத்து வந்த பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ், அமெரிக்க அழுத்தம் காரணமாக, நேரடியற்ற பேச்சுக்களில் கலந்து கொள்ளத் தயாரென்று நேற்று இணக்கம் தெரிவித்த நிலையில், அமெரிக்க உப ஜனாதிபதியின் பயணம் இடம்பெறுகிறது. அந்த இணக்கத்திற்கு அமைவாக, இரு தரப்பினருடனும், மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஜோர்ஜ் மிச்செல் தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்துவார்.
ரஷ்யாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல். read more»
நடிகர் முரளியின் உடல், இன்று தகனம். read more»
குரான் நூலின் பிரதிகளை எரிப்பதற்கு Stephen Harper கண்டனம் read more»
தமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது அறியாத மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டகளில் ஈடுபடுகிறார்கள் - தயாஸ்ரீ ஜயசேகர read more»
கிழக்கில் யுத்தம் முடிந்த பின்னர் 95 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் - த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர செல்வராசா read more»
லஷ்கர் ஈ தொய்பா என்ற பயங்கரவாதக் குழுவின் பயிற்சி மையமாகக் கொழும்பு - இந்திய ஏடு குற்றச்சாட்டு read more»
பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க ஐ.நா அமைதிகாப்புப் படையினர் தவறியுள்ளார்கள் - ஐ.நா உயர் அதிகாரி read more»
இந்தியாவில் தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களுக்குத் வேலைவாய்ப்பில் 20 சதவீதத்தை ஒதுக்கும் அவசர சட்டம். read more»
கனடாவில் முதன்மை வட்டிவீதம் ஒரு சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்ப்பு. read more»
த.தே. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நா. உறுப்பினர் பியசேன அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளார் - இலங்கை அரச ஊடகங்கள் read more»