துப்பாக்கி படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சியை நீக்கிவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார். நண்பன் படத்திற்கு அடுத்து விஜய் நடித்து வரும் படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே 1ம் திகதி இப்படத்தின் டிஸ்லகள் வெளியானது. அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகின. இதற்கு பசுமை தாயகம் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவும் பசுமை தாயகம் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அக்காட்சியை நீக்கிவிட்டதாக முருகதாஸ் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் கிடையாது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் அந்தக்காட்சி இருக்கும். இப்போது அதையும் நீக்கிவிட்டோம். இனி படத்தின் விளம்பரங்களிலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறாது என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் இந்த அறிவிப்பால் துப்பாக்கி படத்திற்கு இருந்து வந்த புகை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»
எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன் read more»
ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர் read more»
விஸ்வரூபம் 2! read more»
சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான் read more»
விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு! read more»
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»