கோச்சடையான் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவுடன் காதல் காட்சிகளை மிக நெருக்கமாக இருக்கும்படி அமைக்க வேண்டாம் என்றும் அது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் ரஜினி தன் மகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாராம். கோச்சடையான் 3 டி அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் தீபிகா ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் காட்சிகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது பாடல் காட்சிகள் சென்னையில் படமாகி வருகின்றன. ஒரு பாடல் காட்சியில் ரஜினியும் தீபிகாவும் மிக நெருக்கமாக காதல் காட்சியில் நடிப்பது போல் சரோஜ்கான் நடன அசைவுகள் வைத்திருந்தாராம். இதனைக் கவனித்த ரஜினி, "இந்த அளவு நெருக்கம் வேண்டாமே," என்று இயக்குநரான தன் மகள் சௌந்தர்யாவிடமும், நடன இயக்குநரிடமும் கேட்டுக் கொண்டாராம். தன்னை விட மிக இளம் வயதான தீபிகாவுடன் அத்தனை நெருக்கமாக நடிப்பது சங்கடமாக உள்ளதாகவும், இந்தக் காட்சிகள் கண்ணியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறும் ரஜினி கூறினாராம். இந்தப் பாடல் குறித்து தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறுகையில், "அது உண்மையிலேயே ஒரு பிரில்லியன்ட் பாடல். ரஹ்மான் அத்தனை அருமையாக ட்யூன் கொடுத்துள்ளார். பரத நாட்டியத்துடன் இணைந்த ரொமான்டிக் பாடல். பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் மிக இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.
டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்? read more»
Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு! read more»
யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம். read more»
அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு! read more»
சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை! read more»
நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா! read more»
விஜய்க்கு தொண்டர் படை! read more»
அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய் read more»
தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா! read more»
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»