வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள படைமுகாம்கள் குறைக்கப்படமாட்டாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். படிப்பினைகள் ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டவாறு படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்ற அவசியம் அரசாங்கத்துக்கு இல்லையென இலங்கை வானொலிக்கு இன்று காலை வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் கூறினார். வடக்கு கிழக்கில் தற்போது இயல்பு நிலை காணப்படுவதாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யதார்த்தமாக சிந்தித்து செயற்பட வேண்டுமெனவும், வெளிநாடுகளுக்கு சென்று அரசாங்கத்தை பற்றி முறையிடுவதால் தமிழ் மக்களுக்குக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் இல்லாமல் போகுமெனவும் அவர் எச்சரித்தார். தம்புள்ள பள்ளிவாசல் இடிக்கப்படவில்லையெனவும், எந்த மதத் தலமும் உடைக்கப்பட அரசு அனுமதிக்காதெனவும், பௌத்த சமயத்துக்குரிய மரியாதை வழங்கப்படவேண்டுமெனவும் அவர் கூறினார். அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாகவும், தமிழ் இனவாத குழுக்களுடன் சேர்ந்து நாட்டில் குழப்பத்தை உருவாக்க அவர்கள் முற்படுவதாகவும் கோதபாய ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»