ஆளும் கட்சியும் தமிழ்க் கூட்டமைப்பும் தனித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இரண்டு தரப்பினரும், ஏற்கனவே போதுமான அளவு பேச்சுக்களை நடத்தியுள்ளதாக அவர் கூறினார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் இரு கட்சிகள் பேச்சு நடத்தும் நிலையை கடந்து, அனைத்துக் கட்சிகளும் பேச்சு நடத்தவேண்டுமென்ற கருத்தை அரசு தற்போது கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரசு அர்ப்பணிப்பை வெளிக்காட்டியுள்ளதைப் போன்று தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் அர்ப்பணிப்பை வெளிக் காட்டவேண்டுமெனவும் பசில் ராஜபக்ஷ கூறினார்.
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ read more»
ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். read more»
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. read more»
மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. read more»
நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார். read more»
தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார். read more»
பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது. read more»
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது. read more»