கனடாவில் வழங்கப்படும் சமுக காப்புறுதி இலக்கத்தைக் கொண்ட அட்டைகள் எதிர்காலத்தில் வழங்கப்பட மாட்டாவென சமஷ்டி அரசு அறிவித்துள்ளது. SIN card என அழைக்கப்படும் அட்டையில் அந்த இலக்கம் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர், அந்த அட்டைகள் வழங்கப்படாதெனவும், இலக்கங்கள் கடிதம் ஒன்றில் மட்டும் அறிவிக்கப்படுமெனவும் கனேடிய அரசு நேற்று அறிவித்தது. அந்த நடவடிக்கை மூலமாக ஒன்றரை மில்லியன் டொலர் பணத்தை மீதப்படுத்தலாமென கனேடிய அரசு கூறுகிறது. அத்துடன், அட்டைகளில் உள்ள சமுக காப்புறுதி இலக்கம் தவறானவர்களின் கைகளுக்கு சென்று, அதன் காரணமாக அடையாள மோசடி இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»