யாழ்ப்பாண இந்தியத் தூதரகத்தில் கலாச்சார உத்தியோகத்தகராக பணியாற்றும் எஸ்.பிரபாகரனின் மகன் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 14 வயதுடைய அக்சையன் நேற்றைய தினம் பள்ளிக்கூடத்திருந்து திரும்புகையில் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். தனது மகனை எதற்காகக் கடத்தினார்கள் என்று தெரியவில்லையென எஸ். பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பும் போது கடத்திச் செல்லப்பட்ட 12 வயதுடைய பரமநாதன் ரஜிராம் என்ற சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வைத்து தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கடத்தப்பட்டு காத்தான்குடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். இந்நிலையில் குறித்த சிறுவன் தற்சமயம் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு நடைபாதை வியாபாரத்திற்கு விடப்பட்டிருந்த வேளையில், குறித்த சிறுவனின் தாயாரால் அடையாளம் காணப்பட்டு பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவனையும் வியாபாரத்தினை நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் நபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மல்லாகம் நீதிபதியின் உத்தரவுக்கமைய சிறுவனை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றின் மூலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். மேலும், குறித்த மூன்று முஸ்லிம்களில் ஒருவரை தடுத்து வைத்துள்ளதுடன் ஏனைய இரண்டு பேரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»