சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் அரசு, போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து நடக்கத் தவறினால், நாளை நண்பகல் போர் நிறுத்தத்தில் இருந்து விலகப்போவதாக சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள Free Syrian Army அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. அரச படைகள் படைத் தளங்களுக்குத் திரும்பவேண்டுமெனவும், கனரக ஆயுத பாவனை நிறுத்தப்படவேண்டுமெனவும் கொஃபி அனான் முன்வைத்த திட்டம் கோருகிறது. Free Syrian Army, சிரியாவின் கணிசமான பகுதிகளை அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளபோதிலும், சிரிய இராணுவத்தை எதிர்கொள்ளத்தக்க ஆயுத பலம் அந்த அமைப்பிடம் இல்லையென ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சிரிய நெருக்கடி மேலும் தீவிரமடையும் நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க பிரதிநிதி சூசன் றைஸ் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். Hula படுகொலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நாளை ஆராயவுள்ளது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»