சிறுவர்கள் ஆயுத மோதல்களில் ஈடுபடுத்தப்படுவதன் காணரமாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் டுளைவ ழக ளூயஅந பட்டியலில் சில ஆண்டுகளாக இருந்த இலங்கை, தற்போது அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆயுத மோதல்களில் சிறுவர்களின் நிலை குறித்துக் கடந்த ஆண்டுக்கான அறிக்கையை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டார். சிறுவர்களைப் படையில் சேர்ப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கவேண்டியதென ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை பணித்த நடவடிக்கைகளை இலங்கை நிறைவு செய்துள்ளதாக போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்தார். விடுதலைப் புலிகளால் படையில் இணைக்கப்பட்ட 6905 சிறுவர்களில் 1373 பேரினது நிலை குறித்தும், ரிஎம்பிவி அமைப்பால் படையில் இணைக்கப்பட்டு இனிய பாரதி பிரிவில் இருந்ததாக கண்டறியப்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 5 சிறுவர்களின் நிலை குறித்தும் எதுவும் தெரியவில்லையென கடந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த விடயம் குறித்து குற்றவியல் நடவடிக்கை இடம்பெறவில்லையென அறிக்கை தெரிவிக்கிறது. 594 சிறுவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதெனவும், காணாமற்போன சிறுவர்களைக் கண்டறிவதற்கு 736 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில் 42 பேர் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ப+னகரியில் பாடசாலை ஒன்றில் இராணுவம் உள்ளதாகவும், அதனை விடவும், மக்கள் குடியமர அனுமதிக்கப்படாத பகுதிகளில் 14 பாடசாலைகளில் இராணுவம் உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»