ரொறன்றோ ஜீ – 20 மகாநாட்டுக் காலப்பகுதியில், காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ரொறன்றோ காவல்துறையை மேற்பார்வை செய்யும் பொதுமக்கள் அமைப்பான ரொறன்றோ காவல்துறை சேவைகள் சபைக்கு முழுமையான தகவல்களும் தெரியாதென மீளாய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சபை, காவல்துறைத் தலைவரை போதுமான அளவு கேள்வி கேட்கவில்லையெனவும், நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி கேட்பதற்குத் தமக்கு அதிகாரம் இல்லையென தவறாக சபை கருதியதெனவும் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோன் மோர்டென்; (John Morden) ) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. அந்த அறிக்கை 38 பரிந்துரைகளைச் செய்துள்ளது. தலைமைதாங்கிச் செயற்படவேண்டிய காவல்துறை சேவைகள் சபை, வெறும் பார்வையாளராக இருந்ததென அவர் குறை கூறுகிறார். காவல்துறை சேவைகள் சபை, அதன் பணி என்னவென அறியாத நிலையில் உள்ளதென்பதை இந்த அறிக்கை காட்டுவதாக ஜீ – 20 மகாநாட்டுக் காலப் பகுதியில் தாக்கப்பட்ட சிலரைப் பிரதிநிதித்துவம் செய்த வழக்கறிஞர் ஜூலியன் ஃபோல்க்கனர்(Julian Falconer) தெரிவித்தார்.
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ read more»
ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். read more»
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. read more»
மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. read more»
நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார். read more»
தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார். read more»
பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது. read more»
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது. read more»