அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைக் காவலர்களினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்தவர், வவுனியா நெலுக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான நிமல் ரூபன்; என்று தெரியவருகிறது. அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைக் காவலர்களினால் தாக்கப்பட்டு படுகாயமடந்த நிலையில் மகர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உரிய சிகிச்சைகள் இன்றி மகர சிறைச்சாலையில் தவித்த நிலையில், நேற்று மாலை ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொள்பிட்டியில் உள்ள மனித உரிமைகள் இல்லம் எடுத்த முயற்சியினால் அவர் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டதாகவும், இன்று காலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாரெனவும், மனித உரிமைகள் இல்லத்தின் வழக்கறிஞர் ரத்னவேல் தெரிவித்தார். தாக்கப்பட்டு கை கால்கள் முறிந்த நிலையில் உள்ள 30 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் சிகிச்சையளித்து அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று மனித உரிமைகள் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நிமல் ரூபன்; என்ற கைதி உயிரிழந்த தகவலை ரத்னவேல் வெளியிட்டாரென எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த கைதியின் உயிரழப்பு மரணம் அல்ல, மாறாக அது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»