இலங்கையின் வடமாகாணத்தில் வசிக்கும் பெருமளவு மக்கள் உணவுப் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நிலைமையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில், 44 சதவீதமானவர்கள் உணவுப் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளதாக இவ்வாண்டிற்கான உலக உணவுத் திட்டத்தின் ப+ர்வாங்க அறிக்கை குறிப்பிடுகிறது. அதில் 7 சதவீதமானவர்கள் மிக மோசமான உணவுப் பாதுகாப்பு நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் அதிக அளவாக, 55 சதவீதமானவர்கள் உணவுப் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளார்கள். வட மாகாணத்தில் உணவுப் பாதுகாப்பு அற்ற மக்களில் 65 சதவீதமானவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார்கள். அங்குள்ளவர்களில் 55 சதவீதமானவர்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளார்கள். கடந்த ஆண்டு வட மாகாணத்தில் 60 சதவீதமானவர்கள் உணவுப் பாதுகாப்பு அற்ற நிலையில் இருந்தார்களென உலக உணவுத் திட்டம் தெரிவித்தது. நிலைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், வட பகுதியின் சில பகுதிகளில் உணவுப் பாதுகாப்புக் குறித்த பாரதூரமான கரிசனை நிலவுகிறதென வட மாகாணத்திற்கான உலக உணவுத்திட்ட அலுவலக பொறுப்பதிகாரி ஜூலியா வஸ்கொன்செலொஸ் (Julia Vasconcelos) தெரிவித்தார். உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது, வேலைவாய்ப்புக்கள் இல்லாதமை, அதிகளவு வறுமை நிலவுவது போன்றன இதற்குக் காரணமென அவர் கூறினார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»