புதுமுகங்கள் எஸ்.சதீஷ், தீப்தி நம்பியார் நடிக்கும் படம் ‘வெள்ளைக் காகிதம்’ ஜி.வி.சந்தர் இயக்கம். சதீஷ்வர்ஷன் இசை. இ.ராஜா, ஏ.கே.எஸ். ஆகிய இருவரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பின்னணி பாடகி எஸ்.ஜானகி கலந்துகொண்டு பாடல் சிடியை வெளியிட்டு பேசினார். அவர் கூறும்போது,‘‘அந்த காலம் முதல் இந்த காலம் வரை இசையின் ரசனை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு நல்ல பாட்டு என்பது குறிப்பிட்ட பகுதியில் மட்டு மில்லாமல் காய்கறி கடையிலும் அது ஒலிக்க வேண்டும். பெரிய இடங்களிலும் ஒலிக்க வேண்டும். கே.வி.மகாதேவன், சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட இசை மேதைகள் வழங்கிய பாடல்கள் என்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த காலத்து மெலடியையும் இந்த காலத்து நவீன இசையையும் கலந்து இப்படத்தின் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நானும் பாடி இருக்கிறேன்’’ என்றார். விழாவில் இயக்குனர்கள் பாண்டி ராஜ், சுசீந்திரன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»
எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன் read more»
ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர் read more»
விஸ்வரூபம் 2! read more»
சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான் read more»
விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு! read more»
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»