கனேடிய அரசின் பல பில்லியன் டொலர் செலவினம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய தகவல் வழங்கப்படுவதில்லையெனவும், அரசின் திட்டங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு போதுமான அவகாசம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைப்பதில்லையெனவும் நாடர்ளமன்ற குழுவொன்று குறை கூறியுள்ளது. இந்த மாதம் வெளியிடப்பட்ட அரச நடவடிக்கைகள் குறித்த நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இந்தத் தகவல் உள்ளது. அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் அதில் அங்கம் வகிக்கிறார்கள். வரவு செலவுத் திட்டம் மிகுந்த கால தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டதால், இந்த முறை நாடாளுமன்றக் குழுக்களால் அவற்றை முழுமையாக ஆராய முடியவில்லையென அறிக்கை குறை கூறுகிறது. ஒவ்வொரு வருடமும், பெப்ரவரி மாதம் முதலாந் திகதிக்கு முன்பாக வரவு செலவுத்திட்டத்தை அரசு சமர்ப்பிக்கவேண்டுமென அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அதிகாரிக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கவேண்டுமெனவும் அந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»