தமிழகத்தில் இலங்கைப் படை உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதன் காரணமாக, தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளார். குன்னூரில் இராணுவ பயிற்சி மையத்திற்குச் சென்றுள்ள இலங்கைப் படை அதிகாரிகளை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிடம் அவர் கேட்டுள்ளார். தாம்பரத்தில் பயிற்சி பெற்ற இலங்கை வான்படையினரை திருப்பி அனுப்புமாறு தமிழக மக்கள் சார்பாக தாம் கேட்டுக் கொண்ட போதிலும், அதனை பொருட்படுத்தாத மத்திய அரசு, அவர்களுக்கு பெங்களுரில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகளை செய்ததென அவர் கடிதத்தில் சுட்டிக் காட்டினார். தற்போது குன்னூருக்கு இலங்கைப் படை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளமை, மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லையென்பதைக் காட்டுவதாக ஜெயாலலிதா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் எந்த மூலையிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாதென இந்திய பிரதம மந்திரி உத்தரவிடவேண்டுமென ஜெயலலிதா கேட்டுள்ளார். இலங்கைப் படை அதிகாரிகள் பயிற்சிக்கென தமிழகம் அழைக்கப்பட்டுள்ளமைக்குக் கடும் கண்டனம் வெளியிட்டு வைகோ, ராமதாஸ் ஆகியோரும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். இதேவேளை, இன்று குன்னூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»