Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்களின் வீடுகள் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் இடம்பெற்றது. Go to previous page
[7/17/2012 ] [cmr news bulletin ]
 



யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூத்த உறுப்பினர்கள் இரண்டு பேரின் வீடுகள் மீது அடையாளந் தெரியாத நபர்கள், கழிவு எண்ணை, மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள்.

அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தவிசாளருமான ராயப்பு ஜோசப் ஆனந்தராஜாவின் நெல்லியடி வீடு, மற்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் தங்கராஜா காண்டீபனின் குடத்தனை வீடு என்பன மீது இன்று அதிகாலை தாக்குதல் இடம்பெற்றது.

வீடுகளின் கண்ணாடி யன்னல்கள், சுவர்கள் என்பனவும் உட்பகுதிகளும் சேதமடைந்தபோதிலும், யாரும் காயமடையவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து நெல்லியடியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வோர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடியில் ஆனந்தராஜாவின் வீட்டைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமது எதிர்ப்புப் போராட்டம் ஜனநாயக வழியிலானதெனவும், எந்தச் சட்டத்தையும் மீறவில்லையெனவும், எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தும் உரிமை தமக்கு உள்ளதெனவும் அவர் கூறினார்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள்.
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார்.
read more»

 

திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது.
read more»

 

நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது.
read more»

 

அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு!
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது.
read more»

 

செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார்.
read more»

 

குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது.
read more»

 

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார்.
read more»

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள்.
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
25-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.