ரொறன்றோ மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட், பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பரை இன்று சந்திக்கவுள்ளார். ரொறன்றோவில் இடம்பெறும் துப்பாக்கி தொடர்பான குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சமஷ்டி அரசு எவ்வாறு உதவி செய்யலாமென்பது குறித்து இன்றைய சந்திப்பில் ஆராயப்படும். பிரதம மந்திரி ஏற்கனவே ரொறன்றோவிற்கு இன்றைய தினம் வரும் நிலையில், மாநகர முதல்வர் அவரைச் சந்திக்க விரும்பியதாகவும், அதனால் அவரைச் சந்திப்பதாகவும், பிரதம மந்திரியின் பேச்சாளர் ஒருவர் கூறினார். நேற்றைய தினம், மாநகர முதல்வர், ஒன்றாரியோ மாகாண முதல்வரைச் சந்தித்தபோது, துப்பாக்கி வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ரொறன்றோ காவல்துறை திட்டம் ஒன்றுக்கு ஐந்து மில்லியன் டொலர் பணத்தை வழங்க டோல்ட்டன் மக்கின்றி முன்வந்தார்.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»