பெண் என்றால் பேயும் இரங்கும் அதுவும் அழகான பெண்கள் என்றால் சொல்லவா வேண்டும்? கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் கூட தளர்ந்து விடும் போல. சினிமா படப்பிடிப்பு அனுமதிக்கப்படாத கோவாவின் மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ள பிரபல சூதாட்ட கப்பலான காஸினோ பிரைடில், நடிகை பிரியாமணிக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பொதுவாக கேஸினோக்கள் எனப்படும் சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதியில்லை. எனவே கோவா அரசு, சுற்றுலா என்ற பெயரில் சூதாட்டத்தை நிலத்தில் அனுமதிக்காமல், நீரில் மிதக்கும் கப்பல்களில் அனுமதிக்கிறது. மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ள பிரமாண்ட கப்பலான கேஸினோ பிரைட், ஒரு பெரிய சூதாட்ட விடுதி எனலாம். பொதுவாக இந்தக் கப்பலில் சினிமா படப்பிடிப்பு போன்றவற்றை அனுமதிப்பதில்லையாம். ஆனால் பிரியாமணிக்காக அனுமதித்தார்களாம். கன்னடத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக ப்ரியாமணி நடிக்கும் லட்சுமி எனும் படத்தின் ஷூட்டிங் இந்த சூதாட்டக் கப்பலில் வைத்து எடுக்கப்பட்டது. கப்பலின் அழகிய உள் அலங்கார வேலைப்பாடுகளையும் படமாக்கிக் கொண்டார்களாம். இந்தக் கப்பலில் நடந்த படப்பிடிப்பு ரொம்ப உற்சாகமாகவும் புதுமையாகவும் இருந்ததாக ப்ரியாமணி தெரிவித்தார்.
டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்? read more»
Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு! read more»
யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம். read more»
அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு! read more»
சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை! read more»
நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா! read more»
விஜய்க்கு தொண்டர் படை! read more»
அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய் read more»
தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா! read more»
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»