நீண்ட நாட்களாக இருப்பில் இருந்த 'தங்க மீன்கள்' படத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க தயாராகிவிட்டார் இயக்குநர் கெளதம் மேனன். 'கற்றது தமிழ்' படத்தை இயக்கிய ராம், தனது இரண்டாவது படமாக இயக்கி, அவரே கதையின் நாயகனாக நடித்த 'தங்க மீன்கள்' படத்தை இயக்குநர் கெளதம் மேனன், தனது போட்டான் க்தாஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் இப்படத்தின் பின்னணி வேலைகள் நடக்காமல் இப்படம் இருப்பில் போடப்பட்டது. தற்போது இப்படத்தின் வேலைகளில் போட்டான் கதாஸ் மும்முரம் காட்ட தொடங்கியிருக்கிறது. இதற்காக முதலில் படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தந்தைக்கும், மகளுக்குமான உறவை சொல்லும் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், 'குழந்தைகள் கீதம்...' என்ற ஒரு பாடல் இடம்பெறுகிறது. இன்றைய கல்வி முறை, தேர்வு முறை, ஆசிரியர்கள், இன்றைய மாணவர்கள் மற்றும் பள்ளிகூடத்தை பற்றிய இந்த பாடல் நிச்சயம் குழந்தைகளுக்கான கீதாமாக அமையும் என்று கூறிய இயக்குநர் ராம், இந்த பாடலை கொண்டு ஒரு பிரத்யேக ஆல்பத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்ன்று, பள்ளி குழந்தைகளுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பாடவைத்து, ஆடவைக்கப் போகிறாராம். யுவன் சங்கர் ராஜாவுடன் பள்ளி குழந்தைகள் இணைந்து பாடப் போகும் இந்த பாடல் காட்சியை அப்படியே படத்தில் இடம்பெறவும் செய்யப்போகிறாராம்.
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»
எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன் read more»
ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர் read more»
விஸ்வரூபம் 2! read more»
சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான் read more»
விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு! read more»
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»