முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் தாம் ஆக்கிரமித்துள்ள இரண்டாயிரத்து 282 ஏக்கர் காணியைத் தமக்கு வழங்குமாறு இலங்கைப் படையினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் வளமான விவசாயக் கிராமங்களில் ஒன்றான கேப்பாபிலவுக் கிராமத்தில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. நேற்று இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோனை சந்தித்த மக்கள், தம்மை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்கள். படையினர் அந்தப் பகுதிகளை ஒப்படைத்ததும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்களென அமைச்சர் கூறினார். ஆனால், அந்த மக்களின் காணிகளைத் தமக்கு வழங்குமாறு படையினர் மீளவும் கேட்டுள்ளதாகவும், மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துமாறு கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»