|
|
|
|
|
|
|
|
|
திருமதி. பரமேஸ்வரி தனபாலசிங்கம்
|
 |
|
 |
தோற்றம்: May 02 1944 மறைவு: Mar-05-2012
|
நவிண்டிலை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தனபாலசிங்கம் அவர்கள் மார்ச் மாதம் 5ம் திகதி காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும். முன்னாள் கல்வி அதிகாரி கிருஷ்ணபிள்ளை - சின்னத்தங்கச்சிப்பிள்ளை அவர்களின் மருமகளும். இளைப்பாறிய கல்விச் சேவை தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. தனபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும். சுவீடனைச் சேர்ந்த யசோதா, நித்தியானந்தன், குகானந்தன், கௌரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும். குகநாதன், மரீனா, தபேந்திரா(சுவீடன்), கரிபாலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும். கார்த்திக், தினேஷ், ரமேஷ், சுரேஷ், அஞ்சலா, சுசானா, ஓவியா(சுவீடன்), நிதிர்சன், தேனுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும். ஜெயக்கொடி, யோகேஸ்வரி, மகேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் சகோதரியும். புவனேஸ்வரி, பரமேஸ்வரி, னுச.சிவசுப்பிரமணியம், னுச.சிவசிதம்பரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மார்ச் மாதம் 7ம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரை 4164 Sheppard Ave Eல் அமைந்துள்ள Ogden Funeral Homeல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று. 256 Kingston Rdல் அமைந்துள்ள St John's Norway Cemetery & Crematorium ல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
416-298-8422 ஃ 647-500-8422
|
|
|
|
|
|
| Posted on
[3/7/2012] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|